4.12.09

கோபம்

வானத்தில் இரவென்னும் கருப்பு மேகங்கள் பிளவுற்று , காலை என்னும் வெண்மேகம் தலைகாட்டுகிறது . உன் கோபம் என்னும் கருப்பு மேகம் தான் பிளந்தபாடில்லை.


மூங்கில் காட்டில் நெருப்பாய் உன் கோவம் அழகு தான். அதை ஏற்றுக் கொள்ளத்தான் என்னால் முடியவில்லை.


வீதி எங்கும் தீபங்கள் ஒளிவீச , என் மனம் மட்டும் இருளில் தவித்தது. உன் கோவத்தால்.


அருகருகே தீபங்கள் பேசுகின்றன புது மொழி , நீ என்னோடு பேச எந்த மொழியும் கிடைக்கவில்லையா ?


போகும் வழி எங்கும் பார்த்தேன் என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய், கண்ணிரன்டும் இமைக்காமல் பார்த்தேன் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தாய் , கைகள் நீட்டி காதல் வரம் கேட்டேன் என் கைகளுக்கு பரிசு இதுதான?

லேபிள்கள்: